அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிய மறுத்த மாணவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கு பின்னர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பணி செய்ய மறுக்கும் மாணவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் துறை சார்ந்த காலி பணியிடங்கள் இருந்தும் தமிழ்நாட்டில் பணி செய்ய பல மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளை முடித்துவிட்டு, அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணி செய்ய மறுத்த மாணவர்களின் பட்டியலை எடுக்க வேண்டும் எனவும், விதி மீறிய மாணவர்களிடமிருந்து தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
image
இதுதொடர்பாக 31ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, தாலுகா மருத்துவமனைகளில் அல்லாமல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணி ஒதுக்கினால் அனைவரும் சேவையாற்ற தயாராகவே இருப்பதாக உயர்சிறப்பு மருத்துவ மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/113997/A-fine-of-Rs-50-lakh-has-been-imposed-on-students-who-refuse-to-work-in-government-medical-colleges-for-2-years-after-completing-their-medical-studies.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா