சீனா: பள்ளிகளில் 7 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கு தடை

ஆறு மற்றும் ஏழு வயது குழந்தைகளுக்கான எழுத்துத் தேர்வுகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. மிகுந்த போட்டி நிறைந்த கல்வி முறையில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் அழுத்தத்தை குறைக்க இந்த முயற்சியை செய்துள்ளதாக அந்த அரசு கூறியுள்ளது.
மாணவர்கள் தொடக்கக்கல்வி முதல் கல்லூரிப்படிப்புகள் வரை தொடர்ந்து தேர்வெழுத வேண்டியுள்ளது. ஆனால், இந்த அழுத்தம் மாணவர்களின் "உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு" தீங்கு விளைவிப்பதாக சீனா கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கல்வி அமைச்சகத்தின் ஒரு அறிக்கையில், "பள்ளிக் கல்வியின் தேர்வுகள் ஒரு அவசியமான பகுதியாகும். ஆனால் சில பள்ளிகளில் அதிகப்படியான தேர்வுகள் போன்ற பிரச்சினைகள் உள்ளன, இது மாணவர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்துகிறது, இது சரிசெய்யப்பட வேண்டும்" என தெரிவித்தது.

தற்போதைய புதிய விதிகளின்படி சீனாவில் பள்ளிப்படிப்பில் ஒரு பருவத்திற்கு உரிய தேர்வு மற்றும் தேர்வுகளின் எண்ணிக்கைகள் குறித்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. "தொடக்கப் பள்ளியின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகள் காகித அடிப்படையிலான தேர்வுகள் தேவையில்லை. மற்ற வகுப்புகளுக்கு, பள்ளி ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு இறுதித் தேர்வை ஏற்பாடு செய்யலாம். உயர்நிலை பள்ளிக்கு இடைநிலைத் தேர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் வாராந்திர தேர்வுகள், யூனிட் தேர்வுகள், மாதாந்திர தேர்வுகள் போன்றவற்றிற்கு அனுமதியில்லை. கல்வி ஆராய்ச்சி போன்ற பல்வேறு பெயர்களில் மாறுவேடமிட்ட தேர்வுகளுக்கும் அனுமதியில்லை" தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/114271/China-bans-exams-for-six-year-old-school-children.html
Comments
Post a Comment