நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரக்கோரி விவசாயிகள் சாலைமறியல்

பொன்னமராவதி அருகே சடையம்பட்டியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி, சாலையில் டிராக்டரை நிறுத்தி விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராமப்புற விவசாயிகள் விளைவித்த நெல்லை இடைத்தரகர்கள் இன்றி அரசே நேரடியாக  கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்து, விவசாயிகள் விளைவித்த நெல்லிற்கு கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகிறது.

image

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சடையம்பட்டியில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களான முள்ளிப்பட்டி, ஒலியமங்கலம், உசிலம்பட்டி, சூரப்பட்டி, கொன்னையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் டிராக்டரில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்தனர்.

பின்னர், சடையம்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தின் முன்பாக சாலையில் வாகனத்தை நிறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு எங்களது நெல் மூட்டைகளை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் சரிவர செயல்படாத நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் பொன்னமராவதி ஒன்றியத்தில் 42 கிராம பஞ்சாயத்துகளுக்கும் ஒரே ஒரு நெல் கொள்முதல் நிலையம் இருப்பதால் விவசாயிகள் சிரமப்படுவதாகவும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையத்தை அரசு திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

image

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி மற்றும் காரையூர் காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/111807/Direct-Paddy-Procurement-Station-Farmers--roadblock-to-bring-into-use.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா