நீட் தேர்வு - அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவு

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நீட் தேர்வு வருகிற செப்டெம்பர் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நடப்பாண்டியில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்திருக்கிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ள நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு எழுத இதுவரை 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 9 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஒரு அரசுப் பள்ளி மாணவர்கூட விண்ணப்பிக்கவில்லை. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களில் 850 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/112122/The-number-of-government-school-students-who-have-applied-for-the-NEET-exam-is-low.html
Comments
Post a Comment