பள்ளி, கல்லூரி திறப்பு: கேரளாவிலிருந்து வரும் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு

பள்ளி, கல்லூரி திறப்பு: கேரளாவிலிருந்து வரும் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் முடிவடையவிருக்கும் நிலையில், தளர்வு நீட்டிப்பு குறித்தும் கொரோனா பாதிப்பு குறித்தும் மருத்துவத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் முடிவில் செப்.1ம் தேதி பள்ளிக் கல்லூரி திறப்பு உறுதியென்ற முடிவை குழு எடுத்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அந்தவகையில் கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், பிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருக்க வேண்டும் என்றும்; பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையும் படிக்கலாமே..தமிழகத்தில் செப்.1 ஆம் தேதி பள்ளி, கல்லூரி திறப்பது உறுதி: தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/114329/School-and-College-Opening--Notice-of-Restrictions-on-Students-Coming-from-Kerala.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா