சிக்கலான நேரங்களில், பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவுகிறது: திருச்சி விவசாயிகள் பாராட்டு

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 9.75 கோடிக்கு மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.19,500 கோடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 9ம்தேதி) வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.1.57 லட்சம் கோடிக்கு அதிகமான தொகையை, 9 தவணைகளில் தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.

image

நடுத்தர விவசாயிகளின் கஷ்டங்களை குறைக்க பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தை பிரதமர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகள் மொத்தம் ரூ.6 ஆயிரத்தை தங்கள் வங்கி கணக்கில் 3 தவணைகளாக பெறுகின்றனர். 

இத்திட்டத்தை வரவேற்ற திருச்சிராப்பள்ளி விவசாயிகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளித்ததற்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு  திருச்சிராப்பள்ளி, மணச்சநல்லூர் வட்டம் அதானி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரேணுகா தேவி நன்றி தெரிவித்தார்.  விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 அளிப்பதற்காக மத்திய அரசுக்கு, மணச்சநல்லூரைச் சேர்ந்த விவசாயி சுதாகர் நன்றி தெரிவித்தார்.

பிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், அடுத்த தவணை தொகை ரூ.2000 அறிவித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு  திருச்சிராப்பள்ளி அதானி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் நன்றி தெரிவித்தார்.

சிக்கலான நேரங்களில், இந்த நிதி, விவசாயிகளுக்கு உதவியாக இருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.

இத்திட்டத்தை சொந்தமாக நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என திருச்சிராப்பள்ளி மணிகண்டம் வட்டம் மேக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள். விவசாயிகளுக்கு இதுபோன்ற நிதியுதவி திட்டத்தை அமல்படுத்தியதற்காக, மத்திய அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/112457/In-times-of-crisis-the-Prime-Minister-s-Kisan-Samman-fund-helps-Farmers-praise-PM.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா