யுபிஎஸ்சி தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த பொறியியல் பட்டதாரிகள்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் பட்டதாரிகளான சுபம் குமார் முதலிடம், ஜகர்த்தி அவஸ்தி இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய தேர்வு முடிவுகளின்படி பொதுப்பிரிவில் 263 பேர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 86 பேர், ஓபிசி 229 பேர் என மொத்தம் 761 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் முதல் 25 இடங்களில் இருப்பவர்களில் 13 பேர் ஆண்கள். 12 பேர் பெண்கள் ஆவர். பொறியியல் பட்டதாரிகளான சுபம் குமார் மற்றும் ஜகர்த்தி அவஸ்தி ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

மொத்தமுள்ள 236 இடங்களுக்கு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 2,053 பேர் நேர்முகத் தேர்விற்கு தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இதையும் படிங்க... குஜராத்: மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/116814/UPSC-declares-final-result-of-Civil-Services-exam-2020--761-candidates-recommended-for-appointment.html
Comments
Post a Comment