வனக்கல்லூரியில் நீக்கப்பட்ட பட்டுப்புழுவியல் துறை: மீண்டும் சேர்க்க கோரி மாணவர்கள் தர்ணா!

பட்டுப்புழுவியல் துறையை மீண்டும் சேர்க்க கோரி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மாணவர்கள் இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டுப்புழுவியல் துறைக்கான பட்டப்படிப்பு 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பின்னர் இத்துறை மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையில் பட்டுப்புழுவியல் துறை இடம் பெறவில்லை. இதனை கண்டித்து இந்த துறை சார்ந்த மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/115217/Students-struggle-to-add-the-removed-silkworm-department-to-the-Government-Forest-College-in-Mettupalayam-Tamil-Nadu.html
Comments
Post a Comment