முதல்வர் படம் இல்லாத சிறந்தஆசிரியருக்கான ராதாகிருஷ்ணன் விருது சான்றிதழ்: குவியும் பாராட்டு

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதில் 2007 ஆண்டு முதல் முதலமைச்சர் படத்துடன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் நடப்பாண்டில் சிறந்த ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி விருதில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் முதலமைச்சர் படம் இல்லாமல், அரசின் முத்திரை, முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் படம் ஆகியவை மட்டுமே இடம் பெற்றுள்ளது. 

சிறந்த ஆசிரியர்களின் பெயர்கள் பள்ளிக்கல்வித்துறையால் தேர்வுச் செய்யப்பட்டப் பின்னர் அவர்களுக்கான விருது தயார் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். 2007 ஆம் ஆண்டு முதல் பாராட்டு சான்றிதழில் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருப்பவரின் புகைப்படம் இடம் பெறுவது வழக்கம்.

image

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றப்பின்னர் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். அதன் அடிப்படையில் 2020-21 ம் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் இடம் பெறவில்லை. அரசின் முத்திரையும், முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் படமும் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதனால் விருதை பெற்ற ஆசிரியர்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனைப்படிக்க: கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் - தற்காத்துக்கொள்வது எப்படி? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/114885/Radhakrishnan-Award-Certificate-for-Best-Teacher-Without-a-Chief-Minister-Picture.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா