கேரளா: கண்ணூர் பல்கலைக்கழக பாடத்தில் தந்தை பெரியார் கருத்துருக்கள் சேர்ப்பு

கேரள பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் பெரியாரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டங்களை கல்வியியல் குழு மாற்றியமைத்துள்ளது. இதன்படி முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்றிருந்த சங்பரிவார், தீன்தயாள் உபாத்யாய், பல்ராஜ் மதோக் உள்ளிட்டோர் தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், நவீன அரசியல் சிந்தனையில் தேசமும் தேசியமும் என்ற தலைப்பில், சாவர்க்கர், கோல்வாக்கர், முகமது அலி ஜின்னா, மெளலான அபுல் கலாம் ஆசாத் உள்ளிட்டோரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

திராவிட தேசியம் என்ற பெயரிலான பாடத்தில் தந்தை பெரியாரின் கருத்துருக்களும் இடம் பெற்றுள்ளன. இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ராம் மனோகர் லோஹியா ஆகியோரைக் குறித்த கருத்துருக்களும் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/117365/Periyar-concepts-are-included-in-the-Kerala-University-syllabus.html
Comments
Post a Comment