மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் மெகா மோசடி! சிபிஐ விசாரணையில் அம்பலம்

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு கடந்த 12- ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது. மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

முன்னதாக, வியாபம் ஊழல் போன்று நீட் தேர்வு மாறியுள்ளதால் அதை மகாராஷ்டிராவில் ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா பட்டோலி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியிருந்த கடிதத்தில், மாநில தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என தெரிவித்து இருந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது, வினாத்தாள் வெளியாகி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றார். சிபிஎஸ்இ போன்ற மத்திய பாடத்திட்ட மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவர்களைவிட அதிக அளவில் நீட் மதிப்பெண்களை பெறுவதாகவும் நானா பட்டோலி குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்கலாம் : நடராஜானுக்கு கொரோனா.. குவாரன்டைனில் வீரர்கள்: நடப்பு ஐபிஎல் சீசனில் அடுத்து என்ன நடக்கும்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/116577/Mega-scam-in-NEET-exam-in-Maharashtra-State-of-India-and-The-CBI-investigation-has-revealed-this.html
Comments
Post a Comment