கேரளாவில் கனமழை - முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு

கேரள மாநிலம் இடுக்கியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்றடி உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து 7ஆயிரத்து 815 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 128 அடியிலிருந்து 131 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 5ஆயிரத்து ஒரு கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை தொடர்ந்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைப்படிக்க...கழக பொதுச்செயலாளர் சசிகலா - எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் சசிகலா பெயரில் கல்வெட்டு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/119257/Heavy-rain-in-Kerala-Water-level-of-Mullai-periyar-dam-rises-by-3-feet-in-one-day.html
Comments
Post a Comment