தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், சேலம், மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என்றும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்கேரளா கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது.

image

மேலும், 20ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப்படிக்க...இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு; மீட்புப் பணிகள் தீவிரம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/119264/Chance-of-heavy-rain-in-7-districts-of-Tamil-Nadu.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா