முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரிக்கு ஒத்திவைப்பு!

முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் நுழைவுத் தேர்வு ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பின் பாடத்திட்டம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதை எதிர்த்து 41 மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தங்களை தயார் செய்யும் வகையில் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டது திரும்ப பெறப்படாது எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/117787/PG-NEET-examination-postponed-to-January-2022.html
Comments
Post a Comment