இந்திய வனப் பணி: தேர்வெழுதிய முதல் முறையிலேயே தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி

பழனி அருகே கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் கீரனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் . இவரது மனைவி சந்திரா மணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மூத்த மகள் திவ்யா, இந்திய வனப் பணி தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் பத்தாம் இடம் பிடித்துள்ளார் திவ்யா.

திவ்யா கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வனப் பணி தேர்வுக்கு தயாராகிவந்த நிலையில், தனது முதல் தேர்விலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திவ்யா, அடிப்படையில் பி.இ. எலக்ட்ரானிக்கல் எலக்ட்ரிக் இஞ்சினியரிங் (இ.சி.இ) பட்டதாரி. தனது பட்டப்படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகதத்தில் படித்து உள்ளார் அவர்.

image

தனது இந்திய வனப் பணி தேர்வின் வெற்றி குறித்து நம்மிடையே பேசிய திவ்யா, “நான் இந்த யு.பி.எஸ்.சி  தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்னுடைய பெற்றோர்களும் ஆசிரியர்களுமே காரணம். அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த பணிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்றுவேன். எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற யு.பி.எஸ்.சி தேர்வுகளில் அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பதே என் விருப்பம். வெற்றி பெற்று பொது மக்களுக்கு சேவை செய்ய பலரும் முன்வரவேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி: செவித்திறன் குறைபாடு தடையல்ல; தமிழை விருப்ப பாடமாக்கி சிவில் சர்வீஸ் வென்ற ஈரோடு இளைஞர்

- அஜ்மீர் ராஜா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/120696/Divya--student-of-Tamil-Nadu-got-first-place-in-Indian-Forest-Service-exam.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா