புதியதலைமுறை செய்தி எதிரொலி: திருவாரூரில் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்ய உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மழை நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது சில இடங்களில் மூழ்கி நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளது என புதிய தலைமுறையில் செய்தி வெளியிட்டிருந்தோம்
அதனை கருத்தில் கொண்டு இன்று திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நெல்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/117985/Echo-of-the-puthiya-thalaimurai-news-Order-to-inspect-submerged-paddy-fields-in-Thiruvarur.html
Comments
Post a Comment