”மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியதில்லை” - என்ன சொல்கிறது பள்ளிக்கல்வித்துறை?

ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் வரும் 1ஆம் தேதி திங்கள்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
காலையிலிருந்து மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். தினமும் ஏற்கெனவே அறிவித்தபடி சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். அதாவது, திங்கள் கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் கிழமை அவர்களுக்கு விடுமுறை. மீண்டும் புதன்கிழமை அவர்கள் வரவேண்டும்.
எந்த வகுப்பினரை எந்த நாட்களில் வர வைக்க வேண்டும் என்பதை அந்த அந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம். ஏனென்றால் ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறையில் வெவ்வேறு எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பார்கள். எனவே அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அந்த அந்த பள்ளி மாணவர்களை திங்கள்கிழமை வரவைக்க வேண்டுமா? அல்லது செவ்வாய்க்கிழமை வரவழைக்க வேண்டுமா? என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். இதுபோன்று ஒரு வகுப்பிற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும்.
சென்னையில் எந்தெந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி? - காவல் ஆணையர் விளக்கம்
ஒரு வகுப்பறையில் 20 மாணவ மாணவிகள் மட்டுமே இருக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட வேண்டும். மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியதில்லை. பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பலாம். வழக்கம்போல் சத்துணவு வழங்கப்படும். ஆன்லைன் வழியில் கல்வி தேவைப்படுவோர் தொடர்ந்து ஆன்லைனில் படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/120653/School-Education-Department-explained-about-schools-reopen.html
Comments
Post a Comment