சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நவ.19ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(19.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நான்கு நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று விடாமல் கனமழை பெய்துவருகிறது.

தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் நீர் தேங்கியிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/122480/Leave-announced-for-schools-and-colleges-in-Chennai-tomorrow.html
Comments
Post a Comment