“தேவைப்பட்டால் வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம்” - பாஜக எம்.பி சாக்ஷி மகராஜ்!

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்திருந்தார். எதிர்வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்டங்கள் வாபஸ் பெறப்பட உள்ளன. விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த பலனாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேவைப்பட்டால் வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார் பாஜகவின் உன்னாவ் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சாக்ஷி மகராஜ். 

“உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த சட்டங்கள் வாபஸ் பெறப்படவில்லை. ஏனெனில் இந்தியாவில் பிரதமர் மோடிக்கும், உத்தரப் பிரதேச முதல் யோகி ஆதித்யநாத்துக்கும் மாற்றே இல்லை. சட்டத்தை விட தேசம் தான் முக்கியம் என்ற முடிவின் மூலம் தனது பெரிய மனசை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தேவைப்பட்டால் வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம்” என தெரிவித்துள்ளார் அவர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/122778/If-it-is-needed-we-will-bring-back-the-Farm-laws-says-BJP-MP-Sakshi-Maharaj.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா